MAP

ஏழைகளோடு பகிரவே நம் செல்வம் ஏழைகளோடு பகிரவே நம் செல்வம்  (ANSA)

தடம் தந்த தகைமை - உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ

பணம், பொருள், சொத்து என்பவற்றையே மையமாகக் கொண்டு வாழும் ஒருவருக்கு அவையே கடவுளாகிப் போகின்றன. அதனையே உயர்செல்வமாய்க் கருதி தங்கள் வாழ்வை அதிலே அடமானம் வைப்பர்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும், (மத் 6:21) என்றார் இயேசு.

“பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் வேர்” (1 திமொ 6:10). பவுல் அடியாரின் இவ்வார்த்தை நம்மில் பலருக்கும் பொருந்தும். பணம், பொருள், சொத்து என்பவற்றையே மையமாகக் கொண்டு வாழும் ஒருவருக்கு அவையே கடவுளாகிப் போகின்றன. இறுதியில் அவற்றாலே அழிவு என்பதை ஆழ்ந்துணர மறந்துவிடுகின்றனர். சிலருக்குப் பணம் என்றில்லை. ஏதேனும் ஒன்று - அதனையே உயர்செல்வமாய்க் கருதி தங்கள் வாழ்வை அதிலே அடமானம் வைப்பர்.

ஒரு மகா கஞ்சன் தன்னிடமிருந்த எல்லாச் சொத்தையும் விற்றுத் தங்கக் காசுகளாக்கிப் பாதுகாப்பாக வைக்க விரும்பினான். வீட்டில் வைத்தால் திருடு போய்விடும் என்றெண்ணி ஊரின் ஓரமாய் ஓடிய ஆற்றோரம் நின்ற ஆலமரத்தடியில் புதைத்தான். ஒவ்வொரு நாளும் ஆலமரத்தடிக்குச் சென்று அவை இருக்கிறதா எனப் பார்த்து வருவான். ஓர் இரவில் பெய்த கனமழையில் ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளம் எல்லாவற்றையும் இழுத்துப் போய்விட்டது. ஒப்பாரி வைத்த அவனைப் பார்த்து ஊரார் காரணம் கேட்க நடந்ததைச் சொன்னான். அருகில் இருந்த பெரியவர் “அது இருந்தென்ன, போயென்ன… எல்லாம் ஒன்றுதான்” என்றார்.

நாம் பயன்படுத்தாமல் பதுக்கும் செல்வங்களெல்லாம் ஏழைகளுடையது.

இறைவா! உயிர் தந்த நீரே என் உயர் செல்வம். உம்மையே பற்றி வாழும் உள்ளம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 ஜனவரி 2025, 15:18