MAP

சீடர்களுடன் உரையாடும் இயேசு சீடர்களுடன் உரையாடும் இயேசு  

தடம் தந்த தகைமை - எதைப் பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?

என் கருத்து, உங்கள் கருத்து, நம் கருத்து என்பவை தவிர்த்து எழுபவை எல்லாம் பழித்தல், சுய கௌரவம், மட்டம் தட்டல், ஆதிக்கம் என்பனவற்றின் நச்சுக் கதிர்வீச்சுகளே.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

வழியில் நீங்கள் எதைப் பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்? (மாற் 9:33) என தன் சீடர்களிடம் கேட்டார் இயேசு.

பல நேரங்களில் குழுமங்களில் எழும் சிக்கல் எதுவெனில் தங்களுள் யார் பெரியவர்?; என்பதே. இச்சிக்கல் இயேசுவின் குழுமத்தையும் விட்டு வைக்கவில்லை. ஏனெனில் அவர்கள் தங்களுள் புரிதல்களையும், இலக்குகளையும் ஏற்படுத்திக்கொண்டு இணைந்து இயக்கமாகச் செயல்பட முனைந்த குழுமமல்ல. அவர்கள் இயேசுவால் இணைக்கப்பட்ட குழுமம்.

ஓரிரு ஆண்டுகள் இயேசுவோடு அவர்கள் பயணித்தாலும் பக்குவப்பட்ட வாழ்வுக்குள் நுழையவில்லை என்பதே அவர்களது வாதாடுதல் வெளிக்கொணர்ந்த உண்மை. நல்ல உரையாடல் நன்மை பயக்கும், அதனில் தெளிவுகள் பிறக்கும், உண்மைகள் உயிர்க்கும். அது புதிய செயல்பாட்டிற்கான பாதை வகுக்கும். ஆனால் பெரும்பாலும் நம்மிடையே நிகழ்வுறும் வாதங்கள் விதண்டாவாதங்களாகவே அமைந்துவிடுகின்றன. உண்மையான ஓர் உரையாடல் 3 நிலைகளைக் கொண்டது. 1. என் கருத்து. 2. உங்கள் கருத்து. 3. நம் கருத்து. இவை தவிர்த்து எழுபவை எல்லாம் பழித்தல், சுய கௌரவம், மட்டம் தட்டல், ஆதிக்கம் என்பனவற்றின் நச்சுக் கதிர்வீச்சுகளே.

இறைவா! வாதிட்டுச் சாதிப்பதை விட வாழ்ந்து வரலாறாகும் வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஜனவரி 2025, 12:29