MAP

பங்களாதேஷ் கிறிஸ்தவர்கள் பங்களாதேஷ் கிறிஸ்தவர்கள்  (AFP or licensors)

உணவுகளின் விலை உயர்வால் பெரும் நெருக்கடியில் பங்களாதேஷ்

பங்களாதேஷ் நாட்டில் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது குறித்து புதிய அரசு அக்கறை எடுத்துச் செயல்பட வேண்டும் என விண்ணப்பித்துள்ளார் டாக்கா துணை ஆயர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பங்களாதேஷ் நாட்டில் உணவுப்பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது குறித்து புதிய அரசு அக்கறை எடுத்துச் செயல்பட வேண்டும் என அரசுக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார் டாக்கா துணை ஆயர் Subroto Boniface Gomes.

உணவுப்பொருட்களின் விலை உயர்வால் மக்களின் வாழ்வு பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது என்ற ஆயர், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மக்களை வாழமுடியா ஒரு நிலைக்குத் தள்ளியுள்ளது என்றார்.

இந்த புத்தாண்டில் நாம் சந்திக்கும் பெரும் சவாலாக உணவு விலையேற்றம் உள்ளது என்ற டாக்கா துணை ஆயர் கோமஸ்,  மக்களுக்கு உதவும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது புதிய அரசின் கடமை என்றார்.

முன்னாள் பிரதமர் Sheikh Hasina இந்தியாவிற்கு தப்பிச் சென்றதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து Muhammad Yunus அவர்கள் இடைக்கால அரசின் தலைவராக இருந்து வருகிறார்.

இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்ட இவர், 2006ஆம் ஆண்டு அமைதிக்கான நொபேல் விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 ஜனவரி 2025, 15:59