MAP

கர்தினால் ஃபிலிப் நேரி ஃபெரோ கர்தினால் ஃபிலிப் நேரி ஃபெரோ  (Vatican Media)

ஒன்றிணைந்த பயணத்திற்கான புதிய அலுவலகம் அமைக்க ஆசிய ஆயர்கள் முடிவு!

உலகெங்கிலும் உள்ள ஏனைய ஆயர் பேரவைகளின் உள்ளொளிகளைப் (insights) பயன்படுத்தி, ஒன்றிணைந்த பயணத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த விரிவான பயிற்சி மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளின் அவசியத்தை கர்தினால் ஃபெரோ அவர்கள் தனது உரையில் வலியுறுத்தினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆசியாவில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள், திருஅவைசார் விவகாரங்களில் பொதுநிலையினரின் பங்கேற்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தவும், ஆயர் மாமன்றத்தின் உத்வேகத்தைத் தக்கவைக்கவும், ஒன்றிணைந்த பயணத்தின் மாற்றத்திற்கான அலுவலகத்தை நிறுவ (Office for Synodal Transformation) திட்டமிட்டுள்ளனர் என்று யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

கோவாவின் கர்தினால் ஃபிலிப் நேரி ஃபெரோவின் தலைமையில், இந்த அலுவலகம் ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினரின் தலைவர்களுக்குத் தொடர் உருவாக்கப் பயிற்சியை (ongoing formation) வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், அவர்களின் சமூகங்களை ஒன்றிணைந்த பயணத்தின் (synodality) செயல்பாட்டில் வழிநடத்த அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்குகிறது என்றும் உரைக்கிறது அச்செய்தி.

மேலும் ஆசியா முழுவதும் சிறந்த நடைமுறைகள், வளங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் இதுவொரு தளமாக செயல்படும் என்றும்,  செயல்பாட்டில் உள்ள ஒன்றிணைந்த பயணத்தின் (synodality) வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளையும் இந்த அலுவலகம் ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் என்றும் எடுத்துக்காட்டுகிறது அச்செய்திக் குறிப்பு.

உலகெங்கிலும் உள்ள ஏனைய ஆயர் பேரவைகளின் உள்ளொளிகளைப் பயன்படுத்தி, ஒன்றிணைந்த பயணத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த விரிவான பயிற்சி மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளின் அவசியத்தை கர்தினால் ஃபெரோ அவர்களும் தனது உரையில் வலியுறுத்தினார்  என்றும் சுட்டிக்காட்டுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 ஜனவரி 2025, 13:14