MAP

அருள்பணி கபிரியேல் ரோமனெல்லி அருள்பணி கபிரியேல் ரோமனெல்லி 

நம்பிக்கையைத் தரக்கூடிய புதிய காற்றினை வீசும் போர் நிறுத்தம்

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 33 இஸ்ரேலிய பிணையக்கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக விடுவிக்கப்பட உள்ளார்கள்

மெரினா ராஜ் – வத்திக்கான்

காசாவில் அறிவிக்கப்பட்டுள்ள போர்நிறுத்தம் பற்றிய செய்தி மகிழ்வினை ஏற்படுத்துகின்றது என்றும்,  நம்பிக்கையைத் தரக்கூடிய  புதிய காற்றினை வீசுகின்றாது என்றும் எடுத்துரைத்தார் காசா பகுதியில் உள்ள திருக்குடும்ப பங்குத்தளத்தின் பங்குத்தந்தை அருள்தந்தை Gabriel Romanelli.

சனவரி 17 வெள்ளிக்கிழமை ஃபீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள செய்தியின்போது இவ்வாறு கூறியுள்ள அருள்பணியாளர் Gabriel Romanelli அவர்கள், போருக்குப் பிந்தைய காலம் மிகவும் துன்பகரமாக இருக்கும் என்றும் மக்களுக்கு அந்நேரத்தில் உதவத்தயாராக இருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.  

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் பற்றிய அறிவிப்பு "புதிய காற்றையும் எதிர்நோக்கையும் வரவேற்க உள்ளது என்று எடுத்துரைத்துள்ள அருள்பணியாளர் ரோமனெல்லி அவர்கள், போரினால் பாதிக்கப்பட்ட காசாபகுதி மக்கள் அனைவரும் அனுபவிக்கும் மகிழ்ச்சியையும் நன்றியுணர்வையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் அண்மையில் வன்முறை மற்றும் மோதல்களால் பத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றுள்ளனர் என்று எடுத்துரைத்துள்ள அருள்பணியாளர் ரோமனெல்லி அவர்கள், மரணம், அழிவு மற்றும் வேதனை தொடர்கின்றது என்ற வார்த்தைகள் அன்றாட வாழ்க்கையில் நுழைந்து வாழ்வை வீணடிக்கின்றன என்றும் கூறியுள்ளார்.

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 33 இஸ்ரேலிய பிணையக்கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக விடுவிக்கப்படுவார்கள் என்றும், இந்த முதல் கட்டத்தின்போது இறுதி அமைதியை அடைய ஒரு பாதை அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் அருள்பணியாளர் ரோமனெல்லி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 ஜனவரி 2025, 15:27