கிறிஸ்துவில் நமது நம்பிக்கையை வேரூன்ற நாம் அழைக்கப்படுகின்றோம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இந்த யூபிலி ஆண்டில் திருப்பயணங்களில் பங்கேற்கவும், கிறிஸ்துவில் நமது நம்பிக்கையை வேரூன்றவும் நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும், உலகளாவிய திருச்சபையுடன் ஒன்றிணையவும், கடவுளின் ஆழ்ந்த அன்பை அனுபவிக்கவும் நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும் கூறினார் ஆயர் ஆல்தோ.
சனவரி 10 வெள்ளிக்கிழமை ஒலா பகுதியில் நடைபெற்ற யூபிலி ஆண்டு துவக்க திருப்பலியின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார், ஐக்கிய அரபு அமீரகத்தின் வடக்குப்பகுதி அப்போஸ்தலிக்க நிர்வாகியான ஆயர் ஆல்தோ பெரார்தி
யூபிலி ஆண்டு 2025 ஐ முன்னிட்டு பஹ்ரைனின் அவாலியில் உள்ள அரேபியா அன்னை மரியா ஆலயம் (OLA), குவைத்தின் அஹ்மதியில் உள்ள திருக்குடும்ப ஆலயம் கத்தாரின் தோஹாவில் உள்ள அன்னை மரியா ஆலயம் போன்றவைகள் திருப்பயணிகளாக மக்களை வரவேற்கத் தயாராக உள்ளன என்று திருப்பலி மறையுரையின்போது எடுத்துரைத்த ஆயர் ஆல்தோ அவர்கள் ஊக்கமூட்டுதல் குணப்படுத்துதல் ஆகியவற்றை நாடித் தேடும் மக்கள் மற்றும் புதிய சொந்த உணர்வைத் தேடும் அனைவரையும் வரவேற்கத் தயாராக உள்ளன என்றும் கூறினார்.
நாம் வாழ்கின்ற கடினமான இந்த உலகில் நாம் நமது எதிர்நோக்கை வெளிப்படுத்த வேண்டும் என்றும், நமது நம்பிக்கைக்கும் அதன் மறுபிறப்புக்கும் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்றும் கூறினார் ஆயர் Aldo Berardi O.SS.T.
பழமையான மரபுகளின்படி, யூபிலி கொண்டாட்டங்கள் எப்போதும் கத்தோலிக்க பாரம்பரியத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன என்று சுட்டிக்காட்டிய ஆயர் ஆல்தோ அவர்கள், கடவுளின் இரக்கம், உடனிருப்பு, திருப்பயணம் ஆகியவற்றை யூபிலி நாள்கள் எடுத்துரைக்கின்றன என்றும் கூறினார். (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்