MAP

கிறிஸ்து பிறப்புக் காட்சி கிறிஸ்து பிறப்புக் காட்சி  

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா : சிறப்புச் செய்தி

இந்தக் கிறிஸ்து பிறப்பு விழா நம் வாழ்வை மாற்றும் ஓர் அர்த்தமுள்ள விழாவாக அமையட்டும். இந்த யூபிலி ஆண்டிலே நம்மை புதுப்பித்துக்கொண்டு எதிர்நோக்கின் திருப்பயணிகளாக ஒன்றிணைந்து பயணிப்போம்.
கிறிஸ்து பிறப்பு சிறப்புச் செய்தி : அருள்பணியாளர் ஹென்றி லாரன்ஸ், கோவை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அன்பு நேயர்களே, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாட நாம் அனைவரும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறோம். மேலும் இயேசுவின் பிறப்பை பொருள்பொதிந்த வகையில் கொண்டாட கடந்த நான்கு வாரங்களாக நம்மையே நாம் தகுந்த விதத்தில் தயாரித்திருக்கிறோம். ஆகவே, இந்தக் கிறிஸ்து பிறப்பு விழா நம் வாழ்வை மாற்றும் ஓர் அர்த்தமுள்ள விழாவாக அமையட்டும்.

யூபிலி ஆண்டு 2025

சிறப்பாக, வரும் புதிய ஆண்டு இயேசு பிறந்த கிபி 2025-ஆம் ஆண்டாக அமைவதால் நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'எதிர்நோக்கின் திருப்பயணிகள்' என்ற தலைப்பில் இந்த ஆண்டை யூபிலி ஆண்டாக அறிவித்துள்ளார். இன்று இரவு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் புனிதக் கதவினைத் திறந்து இந்த யூபிலி ஆண்டைத் தொடங்கி வைக்கிறார். இந்த யூபிலி ஆண்டிலே வாழ்வதற்கும் அதனைக் கொண்டாடுவதற்கும் நாம் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். ஆகவே, இந்தப் புனித ஆண்டிலே நம்மை புதுப்பித்துக்கொண்டு எதிர்நோக்கின் திருப்பயணிகளாக ஒன்றிணைந்து பயணிப்போம்.

கிறிஸ்து பிறப்பு சிறப்புச் செய்தி

இந்நாளிலே, கிறிஸ்து பிறப்பு சிறப்புச் செய்தியை நமக்கு வழங்கவிருப்பவர் அருள்பணியாளர் ஹென்றி லாரன்ஸ். இவர் கோவை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள் பணியாளர். கடந்த 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். கோவை மறைமாவட்டப் பேராலயத்தின் உதவிப் பங்குத் தந்தையாகவும், ஆயரின் செயலராகவும், கோவை மறைமாவட்டத்தைச் சார்ந்த ஈரோடு மாவட்டத்தில் செயல்படுகின்ற ‘சீமா’ என்கின்ற சமூகப் பணி மையத்தின் இயக்குநராகவும் பணிபுரிந்தவர். பசுபதிபாளையம் பங்கில் பங்குத் தந்தையாகப் பணியாற்றிவிட்டு, தற்போது மேட்டுப்பாளையம் புனித அந்தோனியார் பங்கில் பங்குத் தந்தையாக சிறப்பாகப் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார். ஒரு நல்ல பங்குத் தந்தைக்குரிய அத்தனை குணங்களையும் தன்னக்கத்தே கொண்டவர். நல்ல சிந்தனையாளர் மற்றும் மறையுரையாளர். சிறப்பாக, எல்லோருடனும் நல்லுறவுகளைப் பேணிக்காப்பவர். தந்தையின் பணிகள் சிறக்க அவருக்காக இந்நாளில் இறைவேண்டல் செய்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 டிசம்பர் 2024, 10:38