தென்கிழக்கு ஆசியாவில் இன்று சுனாமி தினம் அனுசரிப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த 2004 -ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதியன்று , கடலுக்கு அடியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட மிகப்பெரும் சுனாமி தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளை பேரழிவிற்கு உட்படுத்தியது என்றும், இதன் விளைவாக 226,000-க்கும் மேற்பட்டோர் இறந்தனர், 94,000-க்கும் மேற்பட்டரோ காணாமல் போயினர் மற்றும் 600,000 மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர் என்றும் உரைக்கிறது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.
டிசம்பர் 26, வியாழக்கிழமை இன்று, காரித்தாஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள வேளை, தனது இணைவமைவு (network) வழியாக கத்தோலிக்கத் தலத்திருஅவைகளுடன் இணைந்து பணியாற்றி இச்சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவியதையும் இந்நாளில் நினைவுகூர்ந்துள்ளது அவ்வமைப்பு.
எதிர்பாராத விதமாக ஏற்றப்பட்ட இப்பேரழிவு உலகளாவிய நிதி திரட்டும் முயற்சியைத் தூண்டியது என்றும், தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசுகளிடமிருந்து ஏறத்தாழ 11 பில்லியன் ஈரோக்கள் (euros) திரட்டப்பட்டது என்றும் கூறியுள்ளது
மேலும் கத்தோலிக்கத் தலத்திருஅவைகள் அதன் காரித்தாஸ் இணைவமைவு வழியாக, இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிலும் குறிப்பாக மிகவும் ஏழை எளிய மக்களுக்கும் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தது என்றும் அச்செய்திக் குறிப்பில் எடுத்துக்காட்டியுள்ளது
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள காரித்தாஸ் அமைப்புகள் உடனடி உதவிகளை வழங்கின, இதேவேளை, அனைத்துலக காரித்தாஸ் அமைப்பு, நீண்டகால ஆதரவை ஒருங்கிணைத்தது என்று உரைக்கும் அவ்வறிக்கை, இதில் இத்தாலிய காரித்தாஸ் அமைப்பின் உதவியும் அடங்கும் என்றும், இது அவசரகால பதில் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய இரண்டிற்கும் €37 மில்லியனை ஈரோக்களை ஒதுக்கியது என்றும் தெரிவிக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்