MAP

காலச்சுவடு பதிப்பகத்தின் நிறுவனர் கண்ணன் சுந்தரம் காலச்சுவடு பதிப்பகத்தின் நிறுவனர் கண்ணன் சுந்தரம்  

நேர்காணல் – உலகத்தமிழ் இதழான காலச்சுவடு

தமிழ் மொழியில் 1988ஆம் ஆண்டு காலாண்டு இதழாக வெளிவந்த காலச்சுவடு இதழின் ஆசிரியர் சுந்தரராமசாமி. சிறிதுகால நிறுத்திவைக்கப்பட்டிருந்த இவ்விதழானது 1994ஆம் ஆண்டு கண்ணன், மனுஷ்யபுத்திரன் என்பவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு தொடர்ந்து வெளிவருகின்றது.
நேர்காணல் - காலச்சுவடு இதழின் ஆசிரியர் - கண்ணன் சுந்தரம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

புத்தகம் என்னும் நல்ல நண்பன் இருந்தால், அறிவு, ஆற்றல், பண்புகள் நம்மில் சிறக்கும். படைப்பாற்றல் பெருகும். படிக்கும் ஆற்றல் சிறக்கும். மனச்சோர்விலும், மனஅழுத்தத்திலும் இருக்கும்போது புத்தகம் வாசித்தால் மனஅமைதியையும் மனத்தெளிவையும் ஒருவரால் பெற்றுக்கொள்ள முடியும். ஏனெலில் உலகில் அழியா வரம் பெற்றவைகள் புத்தகங்கள் மட்டும் தான். இத்தகைய புத்தகங்கள் பலவற்றை தமிழ் மொழியின் இலக்கிய சுவை குறையாமல் தமிழ் மொழியில் 1988ஆம் ஆண்டு காலாண்டு இதழாக வெளிவந்த இதழே காலச்சுவடு ஆகும் இதன் ஆசிரியர் சுந்தரராமசாமி. சிறிதுகால நிறுத்திவைக்கப்பட்டிருந்த இவ்விதழானது 1994ஆம் ஆண்டு கண்ணன், மனுஷ்யபுத்திரன் என்பவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவந்தது. இப்போது, எஸ். ஆர். சுந்தரம் எனும் கண்ணனை ஆசிரியராகக் கொண்டு தொடர்ந்து வெளிவருகிறது. தொடக்க காலத்தில் காலாண்டிதழாகவும், பின்னர் இருமாத இதழாகவும் வெளிவந்து தற்போது மாத இதழாக வெளிவரும் காலச்சுஅடு இதழானது, சிறுகதை, கவிதை, அரசியல், சினிமா, கலை, இலக்கியம் தொடர்பான கட்டுரைகளுக்கு இடமளித்து வருவதுடன், பல்வேறு துறைசார்ந்தோரின் நேர்காணல்களையும் பதிவுசெய்து வருகின்றது. காலச்சுவடு பதிப்பகம் பெருமளவு நூல்களையும் வெளியிட்டுள்ளது.

இன்றைய நம் நேர்காணலில் உலகத்தமிழ் இதழான காலச்சுவடு இதழ் பற்றிய கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் காலச்சுவடு இதழின் நிறுவனரான சுந்தர ராமசாமியின் மகன் கண்ணன் சுந்தரம். 1994-இல் இவர் மீண்டும் காலாண்டு இதழாக காலச்சுவடு இதழை வெளியிடத் தொடங்கி, 2000ஆவது ஆண்டு முதல் மாதம் இருமுறை வெளிவரும் இதழாக மாற்றினார். தந்தையின் மறைவிற்குப் பிறகு 2010ஆம் ஆண்டு இதனை தனியார் நிறுவனமாகப் பதிப்பகத்தை மாற்றி அதன் நிர்வாக இயக்குநரானார். இந்தப் பதிப்பகத்தின் மூலம் 142 மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி மாநாடாக தமிழ் இனி 2000 என்ற மாநாட்டினை மற்றவர்களுடன் இணைந்து நடத்திய இவர், பிராங்க்பர்ட் புத்தகத் திருவிழா (2007) உள்ளிட்ட பல்வேறு சர்வதேச இலக்கிய விழாக்களில் சிறப்பு விருந்தினராகவும் பங்கெடுத்துள்ளார்.

பதிப்புத் துறையில் இந்தியா - பிரான்ஸ் இருநாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக, பிரான்ஸ் நாட்டின் 2022 ஆம் ஆண்டிற்கான செவாலியே விருது பெறத் தேர்வாகி இவர், பப்ளிஷிங் நெக்ஸ்ட் என்ற அமைப்பின் மூலம் சிறந்த பதிப்பாளர் விருதையும் பெற்றுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற சு. ரா. கண்ணன் அவர்களை உலகத்தமிழ் இதழான காலச்சுவடு பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 டிசம்பர் 2024, 12:08