MAP

மியான்மாரின் சேதங்கள் மியான்மாரின் சேதங்கள்  (AFP or licensors)

மியான்மார் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஆயர்கள்

மியான்மார் ஆயர்கள் ; விசுவாசத்துடனும் அன்புடனும் கடவுளிடம் ஜெபித்தால், நாம் எல்லா சிரமங்களையும் தாங்கி, இயேசு கிறிஸ்துவுடன் சிலுவையைச் சுமப்பவர்களாக மாற முடியும்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

“நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். (யோ 14.1) என்று, மிகுந்த துன்பங்களுக்கு மத்தியில் மியான்மாரின் மூன்று ஆயர்கள் தங்கள் மக்களுக்கு நம்பிக்கை மற்றும் ஆறுதலளிக்கும் வார்த்தைகளை வழங்கியுள்ளனர்.

Myitkyina மறைமாவட்டத்தின் ஆயர் John Mung-ngawn La Sam, Banmaw மறைமாவட்டத்தின் ஆயர் Raymond Sumlut Gam, Lashio மறைமாவட்டத்தின் ஆயர் Lucas Dau Ze Jeimphaung ஆகிய மூவரும் தங்கள் பகுதிகளில் நடந்த மோதல்கள் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் அடைய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் மற்றும் நடந்துகொண்டிருக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும், மியான்மாரின்  மக்கள் தங்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் கல்வி குறித்து கவலைப்படுவதாகவும் ஆயர்கள் அவர்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அனைவரும்  ஒவ்வொரு நாளும் விசுவாசத்துடனும் அன்புடனும் கடவுளிடம் ஜெபித்தால், நாம் எல்லா சிரமங்களையும் தாங்கி, இயேசு கிறிஸ்துவுடன் சிலுவையைச் சுமப்பவர்களாக மாற முடியும் என்றும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முழு இதயத்துடனும் பலத்துடனும் சோர்வடையாமல் நீடித்த அமைதிக்காக இறைவேண்டல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 ஜூலை 2025, 16:23