MAP

அரசர் நெபுகத்னேசர் அரசர் நெபுகத்னேசர்  

தடம் தந்த தகைமை : உலகின் எல்லைகள் வரை பரவிய மன்னரின் ஆட்சி

அரசரே! அந்த மரம் வேறு யாருமல்ல; மிகப் பெரியவராயும் வலிமையுள்ளவராயும் உயர்ந்துள்ள நீர்தாம். உமது புகழ் வளர்ந்து வானைத் தொடுமளவு உயர்ந்துள்ளது

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இரண்டாம் கனவு குறித்து தானியேல் விளக்கமளித்ததும், "புனிதமிகு கடவுளின் ஆவி உம்மிடம் உள்ளது" என்று அரசர் நெபுகத்னேசர் கூறினார். இதைக் கேட்டவுடன் பெல்தசாச்சார் என்னும் பெயர்கொண்ட தானியேல் ஒரு கணம் திகைத்து நின்றார்; அவருடைய எண்ணங்கள் அவரைக் கலக்கமுறச் செய்தன. அதைக் கண்ட அரசன், “பெல்தசாச்சார், கனவோ அதன் உட்பொருளோ உம்மைக் கலக்கமுறச் செய்யவேண்டாம்” என்றான். பெல்தசாச்சார் மறுமொழியாக, “என் தலைவரே! இந்தக் கனவு உம் பகைவர்களுக்கும் இதன் உட்பொருள் உம் எதிரிகளுக்குமே பலிப்பதாக! நீர் கண்ட மரம் வளர்ந்து வலிமைமிக்கதாய் வானத்தைத் தொடுமளவுக்கு உயர்ந்திருந்தது. நிலவுலகின் எல்லைகளிலிருந்துகூட அதைப் பார்க்கலாம். அதன் இலைகள் மிகவும் அழகாய் இருந்தன. மரத்தில் கனிகள் மிகுதியாய் இருந்தன. அதில் எல்லா உயிர்களுக்கும் போதிய உணவு இருந்தது. அதன் நிழலில் காட்டு விலங்குகள் தங்கியிருந்தன.

அரசரே! அந்த மரம் வேறு யாருமல்ல; மிகப் பெரியவராயும் வலிமையுள்ளவராயும் உயர்ந்துள்ள நீர்தாம். உமது புகழ் வளர்ந்து வானைத் தொடுமளவு உயர்ந்துள்ளது. உமது ஆட்சி உலகின் எல்லைகள் வரை பரவியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 ஜூலை 2025, 11:38