தடம் தந்த தகைமை – ஆண்டவரின் விதிமுறைகளைக் கூறிய தாவீது
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஆண்டவரின் சபையாகிய இஸ்ரயேலர் எல்லாரின் கண் காண, நம் கடவுளின் செவி கேட்க, இஸ்ரயேல் மக்களுக்கு அரசர் தாவீது கூறியது. உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் விதிமுறைகள் அனைத்தையும் நாடிக் கடைப்பிடிப்பீர்களாக! அப்போது நீங்கள் இந்த நல்ல நாட்டை உடைமையாக்கிக் கொள்வீர்கள். உங்களுக்குப் பின் உங்கள் புதல்வர் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். என் மகனே, சாலமோன்! நீயோ, உன் தந்தையின் கடவுளை அறிந்து, முழு மனத்தோடும், ஆர்வமிக்க உள்ளத்தோடும் அவருக்கு ஊழியம் செய்; ஏனெனில், ஆண்டவர் எல்லா இதயங்களையும் ஆய்ந்தறிகிறார்; எல்லாத் திட்டங்களையும், எல்லா எண்ணங்களையும் பகுத்தறிகிறார்; நீ அவரைத் தேடினால் கண்டடைவாய், நீ அவரைப் புறக்கணித்தால் அவர் உன்னை என்றென்றும் கைவிடுவார். இதோ பார்! திருத்தலமாகக் கோவில் ஒன்று கட்டுவதற்கு ஆண்டவர் உன்னைத் தெரிந்தெடுத்துள்ளார்! துணிவுடன் அதைச் செய்வாயாக!”
தாவீது தம் மகனிடம் கோவிலின் மண்டபம், அதன் அறைகள், அதன் கருவூல அறைகள், அதன் மேல்மாடிகள், அதன் உள்ளறைகள், இரக்கத்தின் இருக்கைக்கான அறை ஆகியவற்றின் மாதிரி வடிவத்தைக் கொடுத்தார். மேலும், தம் மனத்தில் எண்ணியபடி, ஆண்டவரது இல்லத்தின் முற்றங்கள், அதைச் சுற்றியுள்ள அறைகள், கடவுளின் கோவிலுக்கான கருவூலங்கள், நேர்ச்சைப் பொருள்களின் கருவூலங்கள் ஆகியவற்றின் மாதிரி வடிவத்தைக் கொடுத்தார். அவர், குருக்கள், லேவியர் ஆகியோரின் பிரிவுகள், ஆண்டவரின் இல்லப் பணிக்கான அனைத்து முறைவேலை, ஆண்டவரது இல்லப் பணிக்கான அனைத்துக் கலங்கள் ஆகியவற்றின் செய்முறை குறிப்புகளைக் கொடுத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்