MAP

செனகல் நாட்டுக் கிறிஸ்தவர்கள் செனகல் நாட்டுக் கிறிஸ்தவர்கள்  (ANSA)

சஹாராவை அடுத்த நாடுகளில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2010 முதல் 2020 வரை உலகில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 210 கோடி என்பதிலிருந்து 230 கோடியாக அதிகரித்துள்ளபோதிலும், உலக மக்களில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 31 விழுக்காடு என்பதிலிருந்து 29 விழுக்காடாக குறைந்துள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வளர்ச்சியைப் பொறுத்தவரையில் ஆப்ரிக்காவின் சஹாராவை அடுத்த நாடுகள் ஐரோப்பாவின் இடத்தைப் பிடித்து வருவதாக Pew என்ற ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.

சஹாராவை அடுத்த நாடுகளில் குழந்தைப் பிறப்புகள் அதிகரித்து வருவதாலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவ மதத்திலிருந்து பலர் வெளியேறி வருவதாலும், கிறிஸ்தவ எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் சஹாராவை அடுத்த நாடுகள் ஐரோப்பாவின் இடத்தைப் பெற்றுவருவதாக இந்த ஆய்வு அமைப்புத் தெரிவிக்கிறது.

Pew ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, கிறிஸ்தவமே எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்தாலும், ஆசியா பசிபிக், மத்தியக்கிழக்கு நாடுகள், மற்றும் வட ஆப்ரிக்காவில் மிகவும் குறைவாக இருப்பது மட்டுமல்ல, பல பகுதிகளின் மக்கள் மதம் சாராதவர்களாக தங்களை வெளிப்படுத்துவதாலும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010 முதல் 2020 வரை மதநம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை மாற்றம் குறித்து ஆய்வு நடத்தியுள்ள இந்த அமைப்பு, இக்காலக்கட்டத்தில் உலகில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 210 கோடி என்பதிலிருந்து 230 கோடியாக அதிகரித்துள்ளபோதிலும், உலக மக்களில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 31 விழுக்காடு என்பதிலிருந்து 29 விழுக்காடாக குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டில் 124 நாடுகளில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்திருக்க, 2020ஆம் ஆண்டிலேயோ இது 120 நாடுகளாகக் குறைந்துள்ளது.

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்க ஐக்கிய நாடு முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து பிரேசில், மெக்சிகோ, பிலிப்பீன்ஸ், இரஷ்யா, நைஜீரியா, காங்கோ ஆகிய நாடுகளும் வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 ஜூன் 2025, 15:04