MAP

கந்தமால் கலவரக் காட்சிகள் (கோப்புப்படம்) கந்தமால் கலவரக் காட்சிகள் (கோப்புப்படம்)  

ஒடிசாவில் துயருறும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவிலுள்ள ஒடிசாவில் பா.ஜ.க கடந்த ஓராண்டு ஆட்சி செய்துவரும் நிலையில் கிறிஸ்தவர்களை அதிக எண்ணிக்கையில் துன்புறுத்தி அவர்களை இந்து மதத்திற்கு மாற வலியுத்துகிறது : யூக்கான் செய்தி நிறுவனம்

சுஜிதா சுடர்விழி- வத்திக்கான்

இந்தியாவின் ஒடிசாவில் கடந்த ஓராண்டாக இந்து ஆதரவு பெற்ற பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சிசெய்து வரும் நிலையில், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன எனவும், இந்தத் தாக்குதல்கள் மற்ற ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது எனவும்  கிறிஸ்தவத்  தலைவர்கள் கூறியதாக யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த  2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்து ஆதரவுக் கட்சி, ஒடிசாவில் ஆட்சிக்கு வந்த பிறகு, கிறிஸ்தவர்களுக்கு எதிராக திட்டமிட்ட துன்புறுத்தல்கள் தொடங்கியதாகவும், குறிப்பாக, பூர்வகுடியினர் மற்றும் சமூகத்தில்  பின்தங்கிய தலித் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் அதிகம் நடந்தேறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது அச்செய்தி நிறுவனம்

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, கிறிஸ்தவக் கோவில்களில் இறை வழிபாடுகளை சீர்குலைத்தல், இறந்தவர்களை அடக்கம் செய்ய விடாமல் தடுத்தல், கிராமங்களில் சமூக பணிகளைச் செய்ய தடை விதித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாகவ கட்டார்-புவனேஸ்வர் உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த் அருள்பணியாளர் அஜய் குமார் சிங் அவர்கள் அச்செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்..

மேலும் பாஜகவை ஆதரிக்கும் மற்றும் இந்தியாவை ஒரு இந்து தேசமாக மாற்ற பாடுபடும் இந்து குழுக்கள், கிறிஸ்தவர்கள் தங்கள் மத நம்பிக்கையை கைவிட்டு, இந்துக்களாக மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருவதையும் எடுத்துக்காட்டியுள்ளார் அருள்பணியாளர் சிங்

இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரானத் துன்புறுத்தல் வழக்குகளைக் கண்காணிக்கும் புது தில்லியைத் தளமாகக் கொண்ட ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் (UCF) வெளியிட்ட தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் ஒடிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 40 பெரிய தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

இதேபோல் 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கந்தமால் மாவட்டம் மிக மோசமான கிறிஸ்தவ எதிர்ப்புக் கலவரத்தை எதிர்கொண்டதாக உரைக்கும் ஐக்கிய கிறிஸ்தவ மன்றம்,  இதில் 300 தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், 6,000 கிறிஸ்தவ வீடுகள் சூறையாடப்பட்டதாகவும் 56,000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் தங்களை வீடுகளை இழந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 ஜூன் 2025, 12:58